மெர்சல் படத்தின் நடிகரை வளைத்துப்போடா வேண்டிய அவசியம் இல்லையாம் தமிழிசை..

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தால் அவருக்கு பல்வேறுவிதமான கண்டனங்களை பா.ஜா.கவினர் முன்வைத்துவருகின்றனர்.ஆனால் அதே போல் மற்ற அனைத்து தரப்பினரும் விஜயின்

unknown node

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தால் அவருக்கு பல்வேறுவிதமான கண்டனங்களை பா.ஜா.கவினர் முன்வைத்துவருகின்றனர்.ஆனால் அதே போல் மற்ற அனைத்து தரப்பினரும் விஜயின் படத்திற்கே ஆதரவாக கருத்தை கூறிவருகின்றனர்.பின்னர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு  தமிழிசை கூறியது .

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுவது போல் நடிகர் விஜய்யை வளைத்து போட்டு அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை  தெரிவித்தார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம், டிஜிட்டல் இந்தியா குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் தமிழிசை, எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரி வருகின்றனர்.

இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது. பாஜகவில் விஜய்யை இணைத்துக் கொள்ள அக்கட்சியினர் இவ்வாறு குடைச்சல்களை கொடுக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார்.