சமூக சேவையில் கலக்கும் பாலிவுட் நடிகை

சினிமாவில் இருப்பவர்களில் சிலர் சத்தமில்லாமல் சமூக சேவைகள் செய்து வருகின்றனர். ஆனால் எப்படியோ ஒரு வழியில் புகைப்படம் வெளியாகிவிடுகிறது. ஹைதராபாத்தை

unknown node

சினிமாவில் இருப்பவர்களில் சிலர் சத்தமில்லாமல் சமூக சேவைகள் செய்து வருகின்றனர். ஆனால் எப்படியோ ஒரு வழியில் புகைப்படம் வெளியாகிவிடுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நடிகை தியா மிர்ஸா. பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து விலகினார்.

பின்னர் சஞ்சத் தத் வாழ்க்கை வரலாறு படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார். மிஸ் ஆசியா பசிபிக் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சமீபத்தில் மும்பை ஜுகு கடற்கரையில் வாக்கிங் சென்றுள்ளார்.

அப்போது கடற்கரையில் மிதந்த குப்பைகழிவுகளை சுகாதார ஊழியர்களுடன் சேர்ந்து அள்ளி அப்புறப்படுத்தினார். இதுபற்றி பேசிய அவர் விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 400 டன் குப்பைகள் கடல் பகுதியில் தேங்கிவிட்டது.

இதை அகற்றும் பணியில் 1200 பேர் இளைஞர்கள் ஈடுபட்டனர். நானும் கலந்துகொண்டேன். பண்டிகை கொண்டாடினாலும் சுத்தமாக வைத்துகொள்வது நம் கடமை என கூறியுள்ளார்.