'விவேகம்' – ஒரு வார வசூல் விவரம்

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த 'விவேகம்' படம் ஆகஸ்ட் 24ம் தேதி உலகம் முழுவதும்

unknown node

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது.வழக்கம் போலவே அஜித் படம் என்றால் அற்புதமான ஓபனிங் இருக்கும். அது இந்தப் படத்திற்கும் இருந்தது. முதல் நான்கு நாட்களில் சுமார் 100 கோடியைக் கடந்த படம் அடுத்த நான்கு நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.படம் வெளியான முதல் ஒரு வாரத்தில் ‘விவேகம்’ படத்தின் உலக வசூல் 125 கோடியைத் தொட்டுள்ளது. இதன் மூலம், அஜித்தின் முந்தைய வசூல் சாதனையான ‘வேதாளம்’ படத்தின் வசூலான 120 கோடி ரூபாயை ‘விவேகம்’ படம் முறியடித்துள்ளது.தமிழ்நாட்டில் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரை 63 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். சுமார் 90 கோடி வரை வசூலித்தால்தான் படத்தின் அசல் தொகையை வசூலிக்க முடியும். அதற்கு இன்னும் 27 கோடி வரை வசூலாக வேண்டும். இந்த வார இறுதிக்குள் இன்னும் 10 கோடியை வசூலிக்கலாம். அதன் பிறகும் வசூலித்தால்தான் படம் வாங்கியவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.ஆனாலும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படம் வியாபாரத் தொகையையும் வசூலித்து லாபத்தைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள்.கேரளாவில் முதல் நாளில் சுமார் 2.9 கோடி வசூலித்த இந்தப் படம் அடுத்த நாட்களில் வீழ்ந்துவிட்டது. ஆகவே, அங்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.வெளிநாடுகளில் அமெரிக்கா வசூல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பெரிய அளவில் நஷ்டம் வரும் என்பதே உண்மை. படத்தை வாங்கிய வினியோகஸ்தர் ஒரு வாரம் ஆகியும் படத்தின் வசூல் நிலவரத்தை இதுவரை வெளியிடாததில் இருந்து அதைத் தெரிந்து கொள்ளலாம்.மற்றபடி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், அரபு நாடுகளில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துவிட்டதாம்.திரையுலக வட்டாரங்களில் விசாரித்தவரையில் படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடி வரை ஆகியுள்ளது. படத்திற்கான வியாபாரம் 120 கோடியைத் தாண்டி நடந்துள்ளது. பட்ஜெட்டையும் கொஞ்சம் குறைத்து, வியாபரத்தையும் 100 கோடிக்குள் முடித்திருந்தால் ‘விவேகம்’ படம் வாங்கிய அனைவருக்குமே லாபத்தைக் கொடுத்திருக்கும் என்ற ஒரு கணக்கைச் சொல்கிறார்கள்.மேற்கண்ட விவரங்கள் திரையுலக வட்டாரங்களில் திரட்டப்பட்டவை. படத்தின் தயாரிப்பாளர் அறிவிக்கும் வசூல் விவரங்களே அதிகாரப்பூர்வமானது.