விஸ்வரூபம் திரைப் படத்தில், கமல்ஹாசன் ஒரு இந்திய முஸ்லிமாக, ஒரு RAW அதிகாரியாக நடித்திருப்பார். முதலில் பாகிஸ்தான் சென்று, அங்கே முகாமிட்டுள்ள தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவுவார். பின்னர் தலைவர் முல்லா ஒமாருக்கு நெருக்கமான குடும்ப நண்பராக மாறுவார். தாலிபான் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவ பயிற்சி அளிப்பார். தாலிபான் இயக்கத் தலைவர்களின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மதிக்கப் பட்டாலும், அவர் ஒரு RAW உளவாளி என்ற சந்தேகம் யாருக்கும் வராது. தாலிபான் ஆட்சியை அகற்றுவதற்கான அமெரிக்க படையெடுப்பு நிகழும் சமயத்தில், கமல் கொடுத்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தும். தாலிபான் தலைவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை எதிரிக்கு கொடுத்தவர், உற்ற நண்பனாக பழகிக் கொண்டிருக்கும் கமல் தான் என்ற சந்தேகம், அந்நேரம் யாருக்கும் வந்திருக்காது. காலம் தாழ்த்தி தான், அந்த உண்மை தெரிய வரும். இந்தக் கதை, உண்மையிலேயே நடந்த கதை என்று சொன்னால் நம்புவீர்களா?
unknown nodeவிஸ்வரூபம் திரைப்படம், ஒரு உண்மைக் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. உண்மையான வரலாற்றுக் கதையில், தாலிபானுக்குள் ஊடுருவியது, ஒரு CIA உளவாளி. அவரும் ஒரு முஸ்லிம் தான். தாலிபான் தலைவருக்கு நெருங்கிய நண்பனாக இருந்தார். அவரது குடும்பமும், ஒமாரின் குடும்பமும் உறவு முறை கொண்டாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அவர் தான் தாலிபான் போராளிகளுக்கு, கெரில்லா போர்ப் பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது அவரால் தயாரிக்கப் பட்ட பிரச்சார வீடியோவை பார்த்து விட்டு தான், கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் அதே மாதிரியான காட்சிகளை அமைத்தார். அந்த CIA உளவாளியின் பெயரை சொன்னால், இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். அவர் தான் “ஒசாமா பின்லாடன்”! கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், ஒசாமா பின்லாடனை தமது மானசீக குருவாக கருதுகிறார்கள் போலும். தமாஷ்!
“இதெல்லாம் குப்பை…நாங்கள் நம்ப மாட்டோம்…” என்று யாராவது அடம்பிடித்தால், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.
தொடரும்….. நாளைவரை காத்திருங்க இன்னும் இந்த செய்தி முடியவில்லை..