unknown node
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
கடைசி நாள் ஆட்டம் நடந்தது இதில் கைரன் பாவெல் (23), கைல் ஹோப் (0) ஏமாற்றினர். பின் இணைந்த பிராத்வைட், ஷாய் ஹோப் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. பிராத்வைட் (95) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். எனினும் ஷாய் ஹோப் இந்த டெஸ்டில் இரண்டாவது சதம் அடித்து கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பெற்றது.
இதையடுத்து டெஸ்ட் தொடர் 1:1 என, சமன் ஆனது. இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் வரும் செப்., 7ல் லார்ட்சில் நடக்கிறது.