முக்காணியில் வரலாறுகாணாத குடிநீர் தட்டுப்பாடு பொது மக்கள் சாலை மறியல்

இதன் தொடர்ச்சியாக  வாழவல்லான் குடிநீர்வடிகால் வாரியத்திற்கு இங்கிருந்து  தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் வந்த

முக்காணி  குடிநீர் பிரச்சனை தீருமா ?

unknown node

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்  அருகில் உள்ள புன்னக்காயல் பகுதியில் தாமிரபரணி  ஆறு கடலில் கலக்குகிறது . ஆற்றில் தண்ணீர்  வராத நாட்களில் கடல் நீர் ஊருக்குள் வருவதை தடுக்க ஆற்று நீரை பயன்படுத்தும் தனியார் ஆலை ஆண்டுதோறும் ஆற்றின் குறுக்கே  மணலால் தற்காலிகமான தடுப்பணை அமைத்து பராமரித்து வந்தது.கடந்த இரு மாதங்களுக்கு  முன் விஷமிகள் யாரோ இரவில் இந்த தடுப்பணையை உடைத்து விட்டனர்.

கடல் நீர் தாமிரபரணி ஆற்றுக்குள் வெள்ளமாக பாய்ந்தது .வாழவல்லான் தடுப்பணை வரை தேங்கியிருந்த குடிநீர்  கடல் நீராகியது!ஆரம்பத்தில் இதனால் கால்நடைகள் நீரின்றி தவித்தன.படிப்படியாக சுற்றுவட்டார பகுதிநிலத்தடி நீர் உப்பாக மாற துவங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக  வாழவல்லான் குடிநீர்வடிகால் வாரியத்திற்கு இங்கிருந்து  தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் வந்த தாமிரபரணி  ஆற்று புதிய நீரை ஏரல் பகுதியை சேர்ந்தவர்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது,

unknown node

தற்பொழுது  தாமிரபரணி  கரையோரம் அமைந்துள்ள முக்காணியில் வரலாறு காணாத குடிநீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இங்குள்ள பெரும்பாலானவர்கள் குடங்களுடன் சைக்கிள் ,பைக் , ஆட்டோக்களில் தண்ணீர்க்காக ஆத்தூர் வந்து செல்வதை காணமுடிந்தது.

தாமிரபரணி  கரையோரம் உள்ள முக்காணிக்கா இந்நிலை.? இன்று குடிநீர் பிரச்சனைக்காக சாலைமறியல் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர்.

இன்று ஆயிரக்கனக்கான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.