அஜித்தின் முடிவால் ரசிகர்கள் சோகம்

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் விவேகம் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கேரளா தவிர மற்ற பகுதிகளில் லாபம் தான் என

unknown node

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் விவேகம் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கேரளா தவிர மற்ற பகுதிகளில் லாபம் தான் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் விவேகம் படம் வரவே 2 வருடம் ஆக, அவருடைய ரசிகர்கள் அஜித்தை மீண்டும் விரைவில் திரையில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

unknown node

ஆனால், அஜித்திற்கு சமீபத்தில் தான் தோள் பட்டையில் சிகிச்சை முடிந்துள்ளது, மருத்துவர்கள் இவரை மூன்று மாதம் ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.

அதனால், அஜித்தின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு எப்படியும் டிசம்பர் மாதம் தான் வரும் என தெரிகின்றது, அதோடு அஜித்திற்கு கதை சொல்ல பல இயக்குனர்கள் வந்து செல்கின்றனர்.

அஜித்தோ அடுத்தப்படத்தையும் சிவாவிற்கே தர தான் முடிவு செய்துள்ளாராம், என்ன தான் வெற்றிக்கூட்டணி என்றாலும் தொடர்ந்து ஒருவருடனே படம் செய்வது ஒரு சில ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.