'குயின்' படத்தின் ரீமேக்கில் தமன்னா, காஜல் அகர்வால்..!!!

விகாஷ் பால் இயக்கத்தில் கங்கனா ரனவத் நடித்து 2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த 'குயின்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம்,

unknown node

விகாஷ் பால் இயக்கத்தில் கங்கனா ரனவத் நடித்து 2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘குயின்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை நடிகர் தியாகராஜன் வாங்கினார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தை தமிழிலும் ரமேஷ் அரவிந்த் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள்.

ஒரு படத்தின் ரீமேக்கைப் பற்றி இத்தனை குழப்பமான செய்திகள் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் ரீமேக் படங்களின் நாயகி யார் என்பது பற்றி மாறி மாறி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்போதைக்கு தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும் நடிக்கப் போவதாக சொல்கிறார்கள். இதுவும் இறுதியானதா, அல்லது மாறுமா என்பது விரைவில் தெரியும்.