நாமக்கல் ஒப்பந்ததாரர் மரண வழக்கு .. 'மாஜி' மந்திரி ஆஜர்

ஒப்பந்ததாரர் நாமக்கல் சுப்ரமணியம் மர்ம மரணம் குறித்த வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.நாமக்கல்

unknown node

ஒப்பந்ததாரர் நாமக்கல் சுப்ரமணியம் மர்ம மரணம் குறித்த வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.நாமக்கல் – -மோகனுார் சாலை, ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர், சுப்ரமணியம், 58. இவர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர்; அரசு கட்டட ஒப்பந்ததாரர்.ஏப்., 7ல், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, நாமக்கல்லில், சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.இது தொடர்பாக, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், இரு முறை நேரில் விசாரணைக்கு ஆஜரானார். மூன்றாவது முறையாக, மே, 8ல், விசாரணைக்கு செல்வதற்கு முதல் நாள், மோகனுார் அருகே, செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தன் பண்ணை தோட்டத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எழுதியதாக, நான்கு பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது.இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், தமிழக உயர் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து விசாரிக்க, பழனியப்பனுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ‘சம்மன்’ அனுப்பினர்.அதன்படி, நேற்று மதியம், நாமக்கல், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், பழனியப்பன் ஆஜரானார். அவரிடம், டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி, இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார்.வெளியே வந்த பழனியப்பன், நிருபர்களிடம் கூறும்போது, ”ஒரு வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேரில் ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்பினர்.