குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் நடிகர், நடிகைகள் நடனமாட தடை!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர்

unknown node

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் தசரா விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த மக்கள் தற்போது கூட்டத்தை சேர்க்கவும், அதிக பணம் வசூலிக்கவும் தமிழ், இந்தி சினிமா மற்றும் டி.வி. துணை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

குலசேகரபட்டினம் தசரா விழாவின்போது தசரா குழுக்களில் மதுபான விடுதி நடன அழகிகள், டி.வி. சினிமா நடிகைகள் நடிகர்கள் உள்பட பணத்துக்கு அழைத்து வரப்படுவோரின் நடனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.