இந்தியாவின் இளம் போராளி குதிராம் போஸின் நினைவுநாள் இன்று...!

“ஒருமுறை விடை கொடு அம்மா! நான் மீண்டும் பிறப்பேன். சித்தியின் வயிற்றில்… பிறந்தது நான் என்பதையறிய குழந்தையின் கழுத்தைப் பார் அதில் சுருக்குக் கயிற்றின்

unknown node

“ஒருமுறை விடை கொடு அம்மா!நான் மீண்டும் பிறப்பேன்.சித்தியின் வயிற்றில்…பிறந்தது நான் என்பதையறியகுழந்தையின் கழுத்தைப் பார்அதில் சுருக்குக் கயிற்றின்தடமிருக்கும்”சிறையில் குதிராம்போஸ் எழுதி வைத்த பாடல் இது….1908ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மே.வங்கம் முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்டிரேட்டாக இருந்த பிரிட்டிஷ்காரன் கிங்ஸ்போர்டு மீது இளைஞர்கள் குதிராம் போஸூம் பிரபுல்ல சகியும் குண்டு வீசினார்கள். கிங்ஸ்போர்டு தப்பிவிட்டான்.போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்ல சகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் 11 காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16.பாடலில் ’சித்தியின் வயிற்றில்’ என்று ஏன் குறிப்பிட்டார் என்றால், அப்போது அவரது சித்தி கருவுற்றிருந்தார். உடனடியாக மீண்டும் பிறக்க வேண்டுமென்பதற்காக. தப்பித்தவனை விடக் கூடாது என்பதற்காக.இன்று குதிராம் போஸின் நினைவுநாள்.நன்றி : தோழர்.ஜா.மாதவராஜ்