அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான யூசி ப்ரவுஸர் ஆனது, பயனர் விவரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை ஒரு ரிமோட் சர்வருக்கு அனுப்புவது சார்ந்த ஆய்வை ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு ஆய்வகம் நிகழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஎம்இஐ எண் வெளியான தகவல்களின்படி, யூசி பரவுஸர் ஆனது வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் சாதனங்களின் இஎம்இஐ (IMEI) எண் மற்றும் லோக்கேஷன் டேட்டா போன்ற உள்ளடக்கிய தரவுகளை சீனாவின் சேவையகத்திற்கு அனுப்புகிறது என்று கூறப்படுகிறது.
தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையமானது (C-DAC – மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை) “அலிபாபாவிற்கு சொந்தமான யூசி ப்ராப்ரவுஸர் மீதுள்ள குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அது தடை செய்யப்படலாம்.
ஆனால் இணைய பயன்பாட்டில் யூசி ப்ரவுஸர் (UC Browser) இல்லாத ஒரு சாதனத்தை காண இயலாது. அந்த அளவிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரவுஸராக யூசி ப்ரவுஸர் திகழ்கிறது.