கருப்பு கமலஹாசனான விஜய் சேதுபதி....!

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி

unknown node

விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகுவது குறித்த தனது உணர்வை விவரித்த விஜய்சேதுபதி, ”இத்திரைப்படம் வெளியாவது குறித்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே சமயம் பயமாகவும் உள்ளது. இப்படம் குறித்த அதிகப்படியான எதிர்பார்ப்பு மிகவும் பயமுறுத்துகிறது” என்று தெரிவித்தார்.

கமல் – தமிழக அமைச்சர்கள் வார்த்தைப் போர் வலுக்கிறது

கதிராமங்கலத்தை காப்பாற்றுங்கள்: ட்விட்டரில் கலக்கிய விஜய் ரசிகர்கள்

”இது வழக்கமான கதை அல்ல. வித்தியாசமான, அதே சமயம் கேளிக்கை ரீதியான திரைப்படம். இது ரசிகர்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற அச்சம் உள்ளது” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

இக்கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, ”இரண்டும்தான். கண்ணதாசனின் பாடலான கொடியசைந்ததும் காற்றசைந்ததா அல்லது காற்றசைந்தவுடன் கொடி அசைந்ததா என்பது போல் இரண்டும்தான் இயல்பாக அமைகிறது” என்று தெரிவித்தார்.

நடிகர் மாதவனோடு பணியாற்றிய அனுபவம் குறித்து பதிலளித்த விஜய் சேதுபதி, ”மாதவன் என்னை விட மிகவும் சீனியர் நடிகர். பல பெரிய நடிகர்கள், இயக்குநர்களோடு பணியாற்றிய அவரோடு நடிப்பது எனக்கு வசதியாக இருந்தது. இயக்குனர் மற்றும் சக நடிகர்களோடு நல்ல புரிதல் இருந்தது” என்று தெரிவித்தார்.

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்த கமல் ஹாசனாக உருவெடுக்க முடியும் என்று மாதவன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்சேதுபதியை கருப்பு கமல் ஹாசன் என்று கூறலாமா என்று கேட்டதற்கு, ”ஒரு கமல் ஹாசன்தான் உள்ளார். கமல் ஹாசன் ஒரு மிகப்பெரிய சாதனையாளர். அவரோடு என்னை ஒப்பிடக்கூடாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்” என்று விஜய்சேதுபதி குறிப்பிட்டார்.