காலையில் பற்களை துலக்கும் முன் நாக்கை கவனிக்க வேண்டும். அப்போது உள்ள நாக்கின் நிறமானது உங்கள் உடலில் உள்ள பாதிப்பு என்னவென்பதை உணர்த்துகிறது.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால், அது வாய்வு கோளாறு உள்ளது என்பதைக் குறிக்கிறது.
மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் இருந்தால், அது பித்தப்பையில் உள்ள பிரச்சனையைக் குறிக்கிறது.
வெள்ளை நிறத்தில் இருந்தால், அது கபம் மற்றும் சளி பிரச்சனை உள்ளது என்பதைக் குறிக்கிறது.
நீல நிறத்தில் இருந்தால், அது இதயத்தில் உள்ள கோளாறுகளைக் குறிக்கிறது.
பர்பிள் நிறத்தில் இருந்தால், அது கல்லீரலில் ரத்தோட்டம் குறைவாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.
நாக்கின் நுனியில் வெளிறிய கோடுகள் இருந்தால், அது உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லை என்பதை குறிக்கிறது.
நாக்கின் நடுவில் கோடுகளை போல இருந்தால், அது எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்பதைக் குறிக்கிறது.
நாக்கில் வெடிப்புகள் இருந்தால், அது உடலின் தசை வாய்வின் சமநிலையில் உள்ள பாதிப்பைக் குறிக்கிறது.