தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி தம்பி ராமைய்யா பேசும்போது, வேதாளம் படத்தின் ஒரு காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
அப்போது வீட்டின் மேல் ரசிகர்கள் அஜித் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான நேரம் பார்த்த அஜித் தன் கையை மேலே உயர்த்தி கையசைத்தார். அவ்வளவுதான் ரசிகர்கள் செம குஷி. அதோடு மறுபடியும் எல்லோரும் கிளம்புங்கள் என்று சைகையாலேயே கூறினார். உடனே ரசிகர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டனர்.
இதேபோல் தான் எம்.ஜி.ஆர், ரஜினி எல்லாம் தங்களது ரசிகர்களை பார்த்துக் கொள்வார்கள் என்றார்.
இது அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பாசத்தையும் மரியாதையும் காட்டுகிறது..