நடிகை மகனின் பொருட்கள் திருட்டு!! டுவிட்டரில் உதவி கேட்ட நடிகை..,

பிரபல டைரக்டர் மணிரத்னம் - நடிகை சுகாசினி தம்பதியின் மகன் நந்தன். இத்தாலியின் பெலின்னோ நகரில் நந்தனின் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும்,

unknown node

பிரபல டைரக்டர் மணிரத்னம் – நடிகை சுகாசினி தம்பதியின் மகன் நந்தன். இத்தாலியின் பெலின்னோ நகரில் நந்தனின் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும், அவர் வெனிஸ் விமான நிலையத்திற்கு வர யாராவது உதவி செய்யுமாறும் நடிகை சுகாசினி நேற்று (ஆக.,28) இரவு 7 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டார்.தனது மகனின் இருப்பிடம் மற்றும் மொபைல் போன் எண்ணை குறிப்பிட்டிருந்த சுகாசினி, உதவிய செய்ய முடிந்தவர்கள் மட்டும் தனது மகனை தொடர்பு கொள்ளுமாறும், மற்றவர்கள் வீணாக போன் செய்து மகனின் மொபைல் போன் பேட்டரி சார்ஜை வீணடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.சுகாசினி டுவிட்டரில் தகவல் பதிவிட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவரது மகனுக்கு உதவி கிடைத்துள்ளது. இதனையடுத்து, தனது மகனுக்கு உதவி முயற்சி மேற்கொண்ட அனைவரும் நன்றி என குறிப்பிட்டு மற்றொரு டுவிட்டர் பதிவினையும் சுகாசினி பதிவிட்டார்.மகன் நந்தன் சினிமாவிற்கு வருவதை மணிரத்னமும், சுகாசினியும் விரும்பவில்லை. இதனால் அவர் தற்போது தத்துவம் மற்றும் கிறிஸ்துவ நெறிமுறைகள் குறித்து படித்து வருகிறார். சுகாசினி பேட்டி ஒன்றில், தனது மகனுக்கு அரசியல்வாதி ஆவதில் தான் விருப்பம். அவர் அரசியல் படித்து வருவதாக கூறி இருந்தார்.சுகாசினியின் மகன் நந்தன் தனது 15வது வயதில் லெனின் குறித்த, ” கன்டர்ஸ் ஆப் லெனினிசம்” என்ற தலைப்பில் 15 பக்க குறிப்புக்களை எழுதி இருந்தார்.