வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்:

காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதியில்  தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. இளநீரைப் போன்றே ஆரோக்கியமானது

unknown node

காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதியில்  தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன.

இளநீரைப் போன்றே ஆரோக்கியமானது  வெள்ளரிக்காய்ச்சாறு.

வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு முறை   வெள்ளரிச்சாறு அருந்தினால் குணமாகும் .

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

சிறுநீர் வராமல்  அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்