unknown node
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கண்காட்சி இருநாள்கள் நடைபெற்றது.
உலக புகைப்பட தினத்தையொட்டி திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் சார்பில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் புகைப்படம் மற்றும் புகைப்படக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தொடக்கிவைத்தார். பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ முன்னிலை வகித்தார்.
ஆவண புகைப்படக் கலைஞர் செல்வபிரகாஷ், ராஜாசிதம்பரம், திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.