உறங்கினால் மரணம்... போராடும் இளைஞன்!!!!

‘வாலிபரின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை வாலிபர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’ பொருத்திய பின்னர் தான் தூங்க

unknown node

இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட்  நகரில் வசித்து வருபவர்  லியாம் டெர்பிஷைர் (17) . இந்த வாலிபரை  வினோதமான  ஒரு நோய் தாக்கியுள்ளது. வாலிபர் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.

குறிப்பாக,மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம்  (Central Hypoventilation Syndrome)  என்னும் விசித்திரமான நோய் இந்த வாலிபரை தாக்கியுள்ளது.

உலக மக்கள் தொகையில் 1,500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் வாலிபரின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த நோய் தாக்கியுள்ள நபர் தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும் அபாயம் உள்ளது.

வாலிபருக்கு சிகிச்சை அளீத்துவரும் டாக்டர்  கூறியதாவது:-

‘வாலிபரின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை வாலிபர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’ பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.