தட்டி கேட்ட டிஎஸ்பி-க்கு சரமாரி அடி:தூத்துக்குடியில் பரபரப்பு !!!

அந்தோணியார்புரத்தில் சாலையோரத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்திருந்தனர். மேலும் பெண்களை கிண்டல் செய்வது உள்ளிட்ட

unknown node

அந்தோணியார்புரத்தில் சாலையோரத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்திருந்தனர். மேலும் பெண்களை கிண்டல் செய்வது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி சீமைச்சாமி சம்பவ இடத்துக்கு வந்து அங்கு மது குடித்து கொண்டிருந்த சிலரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் காவல் வாகனத்தை மறித்தனர். அதனை தொடர்ந்து டிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரம் அடங்காமல் டிஎஸ்பியையும், அவருடன் இருந்த காவலர்களையும் கடுமையாக தாக்கினர். இதில் அவர்களது சட்டைகள் கிழிந்தனர்.இது தொடர்பாக அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.