unknown node
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10-30 மணிக்கு ஆசிரியர் காலனி 1-வது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாமில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி அடையாதவர்கள், பிளஸ்-2, பட்டப்படிப்பு படித்த ஆண், பெண், மெக்கானிக்கல், டிப்ளமோ, எலக்ட்ரிக்கல், ஐ.டி.ஐ. அனைத்து பிரிவு, டிரைவர் உள்ளிட்ட தகுதிகள் உடையவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.