தூத்துக்குடியில் தாமிரபரணி திருவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிடக்கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்....!

தூத்துக்குடி: நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தாமிரபரணி திருவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட நடைபெற்ற காத்திருக்கும் போராட்டம்

unknown node

தூத்துக்குடி: நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தாமிரபரணி திருவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட நடைபெற்ற காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்பு விவசாயிகளும், மாவட்ட அதிகாாிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 19/10/17 க்குள் தண்ணீா் திறப்பது, மணிமுத்தாறு அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீா் எடுத்திட உயர்அதிகாாிகளுக்கு பரிந்துரை செய்வது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இப்போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மாநில பொருளாளரும்,மாவட்ட செயலாளருமான கே.பி.பெருமாள்,மாவட்ட துணைத்தலைவர் நம்பிராஜன்,மாவட்ட இணைச்செயலாளர் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.