கமலஹாசனுக்கு அரசியலுக்கு வர தைரியமில்லை -அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை :கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சர்ச்சைகள் வெளிவந்தாலும், சமுகத்தின் மீது அக்ககரை கொண்ட குடிமகனாக தொடர்ந்து GST மற்றும்

unknown node

சென்னை :கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சர்ச்சைகள் வெளிவந்தாலும், சமுகத்தின் மீது அக்ககரை கொண்ட குடிமகனாக தொடர்ந்து GST மற்றும் ஊழல்களுக்கு எதிராக தனது கருத்து  பதிவு செய்து வருகிறார் …

unknown node

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக அவரை மிரட்டியும் மற்றும் விமர்சித்தும் வருகின்றனர் .

இதில் கமலுக்கு ஆதரவாக திமுக,மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல அரசியல் கட்சிகளும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

unknown node

ஜெயலலிதா இருக்கும் பொது :

ஜெயாவின் கால் செருப்பில் தூசி இருக்கின்றதா என தொட்டு பார்ப்பதும், ஜெயா கார் டயரின் பட்டம் சரியாக இருக்கின்றதா என குனிந்து கிடந்து சோதிப்பதும் தைரியமென்றால்…,

ஜெயா நடக்கும்பொழுது என் முதுகில் ஏன் மிதிக்காமல் போகின்றீர்கள் என கேட்பதும், அவர் குற்றவாளி என கோர்ட் சொன்னாலும் அந்த குற்றவாளிக்காக மண்சோறு உண்ணுதல், சாலையில் மண் அள்ளிபோட்டு அதகளம் செய்தல் என காட்டெருமை புத்தியோடு நடப்பதுதான் தைரியம் என்றால்…,

ஜெயாவிற்கு அடுத்து இன்னொரு குற்றவாளியினை சின்னம்மா , தியாகமே என கூசாமல் கூறி குனிந்து நிற்பது தைரியமென்றால், அந்த சின்னம்மாவின் அக்கா பெற்ற மகனுக்கும் அடிபணிந்து நிற்பது தைரியமென்றால்..

அட இந்த தைரியத்தையும் சோதிக்க டெல்லி முறைத்தவுடன் சின்னம்மா, சித்தப்பா என எல்லோரையும் விட்டுவிட்டு டெல்லி காலில் விழுந்து கிடப்பது தைரியமென்றால்…

அந்த தைரியம் கமலஹாசனுக்கு இல்லாமலே போகட்டும்.

மிஸ்டர் ஜெயக்குமார், ஒருவேளை கமலஹாசன் அரசியலுக்கு வந்தால் அவருக்கு கமலஹாசன் எனும் அடையாளம் அவருக்கு போதும்

உங்கள் நிலை என்ன?

100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராமசந்திரனையும், 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஜெயலலிதாவினையும் விட்டால் உங்கள் அடையாளமென்ன?

தைரியமாக அந்த அடையாளங்களை தூக்கி எறிந்துவிட்டு, நான் ஜெயக்குமார் என அரசியலுக்கு வர உங்களுக்கு தைரியம் உண்டா?

இந்த லட்சணத்தில் கமலுக்கு தைரியமில்லை என சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்???

எது எப்படியோ, சிரிக்காமல் சீரியசாக காமெடி செய்ய அதிமுகவினரை விட்டால் யாருமே இல்லை.