தனக்கு தானே சூனியம் வைத்து ஸ்டோக்ஸ்:ஐசிசி அபராதம்!!

101-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஷாய் ஹோப் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடும் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ் ஷாய் ஹோப்பை தகாத

unknown node

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

101-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஷாய் ஹோப் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடும் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ் ஷாய் ஹோப்பை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் மேட்ச் அதிகாரிகளுக்கு தெளிவாக கேட்டது.

இதனால் பென் ஸ்டோக்ஸ் செயலுக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.