செரீனாவுக்கு பெண் குழந்தை,,,,

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு பெண் குழந்தை பிறந்ததாக, அமெரிக்க ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. செரீனா தரப்பில் இந்தத் தகவல் உறுதி

unknown node

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு பெண் குழந்தை பிறந்ததாக, அமெரிக்க ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.செரீனா தரப்பில் இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை தெரிவித்ததாக அமெரிக்காவின் வாரப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஃபுளோரிடா மாகாணத்தின் மேற்கு பால்ம் பீச் பகுதியில் உள்ள புனித மேரி மருத்துவ மையத்தில் புதன்கிழமை இரவு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பெண் குழந்தை பிறந்ததாக அந்த ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.இதுகுறித்து, அமெரிக்க ஓபனில் பங்கேற்றுள்ள செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸிடம் தெரிவிக்கப்பட்டபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை கிறிஸ் எவர்ட், செரீனாவின் பயிற்சியாளர் பேட்ரிக் மெüராடோக்லோ உள்ளிட்டோர் சுட்டுரையில் செரீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகின் 15-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் செரீனாவின் கணவர், பிரபல இணையதளமான “ரெட்டிட்’-இன் உரிமையாளர்களில் ஒருவரான அலெக்ஸிஸ் ஒஹானியன் என்பது குறிப்பிடத்தக்கது.