unknown node
சென்னை : அதிமுக அம்மா அணி சார்பில் நேற்று தினகரன் கட்சியின் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார். இதனை தொடர்ந்து கட்சியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் தினகரன் நியமித்த பொறுப்பை ஏற்க மேலும் ஒரு எம்எம்ஏ மறுப்பு தெரிவித்துள்ளார். புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி. தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை விமான நிலையத்தில் எம்எல்ஏ பழனி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.