unknown node
டெர்பி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக இன்றைய ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றய போட்டியில் வெற்றி பெறும் அணி 23ம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.