தரமணி படத்திற்கு 'ஏ' சான்றிதழ்:இயக்குநர் ராம் விளக்கம்!

'தரமணி' திரைப்படத்தில் கதாநாயகி மது அருந்துவது மற்றும் புகைப்பது உள்ளிட்ட பல கட்சிகளை நீக்கவேண்டும் அல்லது ஏ சான்றிதழ் (A- Adults only, 18 வயதிற்கு

‘தரமணி’ திரைப்படத்தில் கதாநாயகி மது அருந்துவது மற்றும் புகைப்பது உள்ளிட்ட பல கட்சிகளை நீக்கவேண்டும் அல்லது ஏ சான்றிதழ் (A- Adults only, 18 வயதிற்கு அதிகமானவர்கள் மட்டும் ) வழங்கப்படும் என்று தணிக்கை குழு கூறியபோது, ஏ சான்றிதழை தான்கேட்டு பெற்றதாக அத்திரைப்பட இயக்குநர் ராம் தெரிவித்தார்.

unknown node

ஏ சான்றிதழ் பெற்றால் என்ன?

ஐ டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நிஜத்தில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளதாக கூறும் ராம், ”படத்தில் பல காட்சிகளை நீக்கிவிட்டு யு/ஏ (U/A – 12 வயதிற்கு குறைந்த குழந்தைகள் பெற்றோர் துணையுடன் மட்டுமே பார்க்கவேண்டும்) அல்லது யு (U-unrestricted public exhibition-அனைவரும் பார்க்கலாம்) சான்றிதழ் பெறவேண்டும் என்று நான் எண்ணவில்லை,” என்றார்.

”ஏ சான்றிதழ் பெறுவதால் திரைப்படத்தின் கருத்தை அப்படியே கொடுக்கமுடியும் என்பதால், அந்தச் சான்றிதழையே வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்,” என்றார் ராம்.

மேலும் அவர் கூறுகையில், ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் அனைத்தும் பாலியல் தொடர்பான படங்கள் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் நிலவுகிறது. அந்த கருத்தை உடைக்கும் படமாக ‘தரமணி’ திரைப்படம் இருக்கும் என்கிறார்.

” பெண்கள் ஏ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு செல்வது என்பது சிக்கலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. பெரியவர்கள் பார்க்க உகந்த படம் என்றால் அதில் பெண்களும் அடங்குவர். ‘ஏ சான்றிதழ் வழங்கப்பட்டாலும், எனது படத்தின் கதைக்காக அதிக எண்ணிக்கையில் பெண்கள் வந்துபார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.