உலக ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அபய் சிங்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.நியூஸிலாந்தின் டெளரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தப்

unknown node

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.நியூஸிலாந்தின் டெளரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்றில் அபய் சிங் 10-12, 11-7, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷமியைத் தோற்கடித்தார்.அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான அதியா ராகவன் 3-11, 11-8, 7-11, 11-4, 3-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் அலி ஹுசைனிடம் தோல்வி கண்டார்.