எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர்... எம்.எல்.ஏ ஆறுக்குட்டி..!

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.

unknown node

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.

அ.தி.மு.க இரண்டாக பிளவுப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்தபோது முதல் ஆளாகப்போய் அவருடன் இணைந்தவர்தான் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி. ஆனால் இன்று காலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேரில் சென்ற ஆறுக்குட்டி, எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி விலகியதற்கு முக்கிய காரணம் அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்காததுதான் என்று அவர் முன்னர் தெரிவித்திருந்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஆறுக்குட்டி புறக்கணிக்கப்பட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏக்களின் அணியின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.

unknown node

கடந்த காலங்களில் அவர் , நான் ஓபிஎஸ் அணியில் இருப்பதால் என் தொகுதி மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.மேலும் அவர் கடந்த ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலின் பொது ஓபிஎஸ் அணிக்காக தப்பு அடித்தும் நடனம் ஆடியும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போதோ மக்களின் நலன் கருதியே தான் எடப்பாடி அணியில் இணைத்திருப்பதாக கூறிவருகிறார். இது யாருக்கு நலன் பயக்கும் என்பதை வரும் காலங்களில் மக்கள் உங்களுக்கு உணர்த்துவார்கள்….