கேரட் புதினா சாதம் செய்வது எப்பிடி ?

தேவைாயன பொருள்கள்:  புதினா - ஒரு கட்டு பாஸ்மதி அரிசி - ஒரு கப் துருவிய கேரட் - 3 நருக்கிய பெரிய வெங்காயம் - 2 பட்டை - சிறு துண்டு லவங்கம் - ஒன்று சோம்பு

unknown node

தேவைாயன பொருள்கள்:

புதினா – ஒரு கட்டுபாஸ்மதி அரிசி – ஒரு கப்துருவிய கேரட் – 3நருக்கிய பெரிய வெங்காயம் – 2பட்டை – சிறு துண்டுலவங்கம் – ஒன்றுசோம்பு – 1 ஸ்பூன்சீரகம் – 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 5பச்சை மிளகாய் – 2எண்ணெய் – 4 ஸ்பூன்நெய் – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு

செய்முறை:

புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து அரைத்து வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய் நெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் கேரட்டை போட்டு வதக்கவும். கேரட் வதங்கியதும் அரைத்த புதினாவைப் போட்டு வதக்கவும்.

அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பின்பு குக்கரை மூடி அடுப்பை 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நன்கு கிளரி பரிமாறவும்.

சுவையான கேரட் புதினா சாதம் ரெடி