ஆக்லாந்து: நியூசிலாந்தில் நடக்கும் ஆக்லாந்து ஓபன் பாட்மின்டன் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் காஷ்யப், பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காஷ்யப், நியூசிலாந்தின் ஆஸ்கரை எதிர் கொண்டார். முதல் செட்டை 21-9 என எளிதாக வென்ற காஷ்யப், அடுத்த செட்டையும் 21-8 என வசப்படுத்தினார். முடிவில், காஷ்யப் 21-9, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் 23-21, 21-18 என இந்தோனேசியாவின் பர்மேனை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா 21-16, 21-16 என இந்தோனேசியாவின் ஹென்ரிகோவை வீழ்த்தினார். இந்தியாவின் சிறில் வர்மா 21-14, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் விக்கியை வென்றார்.
ஆக்லாந்து ஓபன் பாட்மின்டன் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் காஷ்யப், பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர்
ஆக்லாந்து: நியூசிலாந்தில் நடக்கும் ஆக்லாந்து ஓபன் பாட்மின்டன் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் காஷ்யப், பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர். நியூசிலாந்தில்
unknown node