திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தம்பி மனைவியை அண்ணன் கொன்ற வழக்கில் உடந்தையாக செயல்பட்டவர்களை கைது செய்யக் கோரி மறியல் நடைபெற்றது.
மன்னார்குடி அருகே மேளவந்தசேரி கிராமத்தில், எஸ்தர் என்ற பட்டதாரி பெண்ணை கணவரின் அண்ணனால் கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி கோரையாற்றில் வீசப்பட்டார். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த எஸ்தரின் கணவர் ஜோசப் திரும்பி வந்து புகார் அளித்ததையடுத்து, அவரது சகோதரர் நெல்சன் கைது செய்யப்பட்டார். நெல்சனின் கூட்டாளியான சகாயராஜ் சென்னையில் பதுங்கியிருந்த நிலையில், தொலைபேசியில் அழைத்து நீடாமங்கலம் வரவழைத்து கைது செய்தனர். எஸ்தரின் உடலும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே கொலையில் தொடர்புடைய மற்ற குடும்ப நபர்களையும் கைது செய்யக்கோரி எஸ்தரின் உறவினர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்