தொழிலதிபர் மல்லையாவின் , வங்கிக் கடன் மோசடி வழக்கில், இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை முடக்கக் கூடாது என்ற கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார். இதையடுத்து வங்கிகளுக்கு தர வேண்டிய கடனை வட்டியுடன் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று இந்திய கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன்படி, மல்லையாவிடம் 10 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், லண்டன் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி, மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த லண்டன் நீதிமன்றம், இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரத்தை வழங்கி உத்தரவிட்டார்