நிலவில் உள்ள காற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும்..!

நிலவில்  அங்குள்ள தூசி நுரையீரலுக்குள் சென்று திசுக்களை அழிப்பதுடன், மரபணு மாற்றம் மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவில்  அங்குள்ள தூசி நுரையீரலுக்குள் சென்று திசுக்களை அழிப்பதுடன், மரபணு மாற்றம் மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவில் தண்ணீர் இருப்பதாகவும், பனிக்கட்டியாக உறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குக் காற்றும் இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இதனால் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைத்துள்ளதுபோல் நிலவிலும் ஒரு நிலையத்தை அமைத்துவிடலாம் என விண்வெளி ஆய்வு அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் பாப்புலர் மெக்கானிக்ஸ் என்கிற அறிவியல் இதழில் நிலவில் மின்னூட்டம் பெற்ற தூசிகள் நிறைந்துள்ளதாகவும், அவை நுரையீரலுக்குள் சென்றால் திசுக்களையும் மூளை செல்களையும் அழித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தத் தூசி மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் புற்றுநோய் உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.