சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது,மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பிஇசியை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.மிர்ச்சாண்டி மீது.
மேலும் நிறுவனத்தின் இப்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.531 கோடி அளவுக்கு நிறுவனத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ப ட்டுள்ளது.
பைசெஸ் (Pisces) எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜெட் லிங்க் இன்ஃபோடெக் லிமிடெட் நிறுவனங்கள், இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பிஇசி அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் கிரிமினல் சதித் திட்டம் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2010-2012 காலகட்டத்தில் பிஇசி நிறுவனம் இரும்பு உலோகத் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பைசெஸ் நிறுவனத்துடன் 15 ஒப்பந்தங்கள் செய்திருந்தது. பைசெஸ் எக்ஸிம் நிறுவனம் ஒப்பந்தத்தின்படி செயல்படவில்லையென புகாரில் பிஇசி கூறியுள்ளது.
இரும்பு உலோகத் தாதுவை முறைப்படி வழங்காத பைசெஸ் எக்ஸிம் நிறுவனம், இதற்காக பிஇசி அளித்த தொகையையும் திருப்பித் தரவில்லை. தற்போதுவரை ரூ.531.72 கோடி (செப்டம்பர் 30, 2016 வரையிலான வட்டியும் சேர்த்து) பைசெஸ் எக்ஸிம் நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 15 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.