டிரைவ் ஸ்பார்க் ஆப் பீட் சீனாவுடன் போட்டி…மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு… என்னவென்று தெரியுமா? சீனாவுடன் போட்டி…மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு… என்னவென்று தெரியுமா?
எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வெகுவாக குறைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
unknown nodeகாற்று மாசுபாடு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தும் மோட்டார் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் காற்று மாசுபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வருடத்திற்கு பத்து லட்சம் பேர் பலி இந்தியாவுக்கே இப்படி என்றால், இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் நிலையை யோசித்து பாருங்கள். சீனாவின் முன்னணி நகரங்கள் பலவும் வெகுவாக மாசடைந்து விட்டன.
unknown nodeஎலக்ட்ரிக் வாகனம் பெஸ்ட் இந்தியா, சீனா மட்டுமல்ல. பெட்ரோல், டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகையினால், உலகின் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் மாற்றாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.
கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சீனாவில் 6,80,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதர உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். அமெரிக்காவினாலும் நெருங்க முடியவில்லை உலக வல்லரசான அமெரிக்கா கூட எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சீனாவை நெருங்க முடியவில்லை.
அந்த அளவுக்கு சீனா வெகு வேகமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் ஆக இருக்கும் உலகின் முதல் எகோ சிஸ்டம் சீனாவினுடையதாகதான் இருக்கும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் நிலை சீனாவுக்கு நிகரான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் இதற்கு எல்லாம் ஈடுகொடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட், பார்க்கிங் கட்டணத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு, டோல்கேட்களில் சாலை வரியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இது குறித்து நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் வெளியான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
இதனிடையே எலக்ட்ரிக் கார் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எலக்ட்ரிக் கார் பேட்டரிகளுன ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மகேந்திரா, டாட்டா தற்போது இந்தியாவில் மகேந்திரா மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசின் முடிவு எலக்ட்ரிக் கார் உற்பத்தி செலவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் கார் விலை குறையலாம் எந்தவொரு எலக்ட்ரிக் வாகனம் என்றாலும், அதில் விலை உயர்ந்த பார்ட் என்றால், அது எலக்ட்ரிக் பேட்டரிதான்.
இந்தியாவின் பேம் என்ற அமைப்பு 2020ம் ஆண்டுக்குள் 6-7 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் ஓட வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மலைக்க வைக்கும் ஆயில் தேவை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 2017-2030ம் ஆண்டு வரை இந்தியாவின் பயணிகள் வாகனங்களுக்கான ஆயில் தேவை 1.6 பில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பூஸ்ட்…! இதுபோன்ற காரணங்களும், ஆயிலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஒரு மிகப்பெரும் ஊக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.