பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் ..!

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் யூவேஸ், ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிப்பதன் மூலம் தீவிரவாதத் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது என்று  தெரிவித்தார்.

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் யூவேஸ், ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிப்பதன் மூலம் தீவிரவாதத் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது என்று  தெரிவித்தார்.

பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015-ஆம் ஆண்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட பகுதி மீதும், தேசிய மைதானத்தின் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 130 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாரிஸில் வசிப்பவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்தால், இதுபோன்ற தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்தக் கருத்தை பிரான்ஸ் அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யூவேஸ் கூறியதாவது:

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிப்பதன் மூலம் தீவிரவாதத் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது.

துப்பாக்கியால் ஏற்படும் வன்முறைகள் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது  பிரான்ஸ் அமைச்சர் கூறினார்.

பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார் ஜீன் யூவேஸ்