180 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி..!

180 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்ட ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினருக்கு  சீனாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

180 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்ட ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினருக்கு  சீனாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்த சன் ஸெங்காய் ((sun zhengcai)) என்பவர் அதிபர் ஆகும் முயற்சியில் இருந்தவர்.  இவர் கடந்த ஆண்டு ஜூலையில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டார்.

டியான்சின் (Tianjin) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது 180 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை அவர் ஒப்புக் கொண்டார்.

இதை அடுத்து இன்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. சன் ஸெங்காய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.