இந்தியத் தனித்தன்மை அடையாள ஆணையம் ஆதாருடன் மறைமுகமாக வங்கிக் கணக்கைச் சேர்த்துவிடுவதாக ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளை ஒன்றாக்கி உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.
ஆதாரை எதிர்ப்பவர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சியாம் திவான், ஆதாருடன் ஓய்வூதியத்தை இணைக்கும்போது ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கும் தானாகவே ஆதாருடன் இணைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க விரும்பாதவர்களின் செல்பேசிக்கும் ஆதாருடன் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதாகக் குறுஞ்சேதி வந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். ஆதாரை வங்கி கணக்குடன் இணைப்பதை விருப்பத் தேர்வாக வைக்கலாமேயன்றிக் கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்