பொது இடங்களில் தொழுகை நடத்தப்பட்டதாக சர்ச்சை: அரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்..!

அரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், தொழுகைகள் பள்ளிவாசல்களில்தான் நடத்தப்பட வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

அரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், தொழுகைகள் பள்ளிவாசல்களில்தான் நடத்தப்பட வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் குர்கான் நகரில் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள பொது இடங்களில் தொழுகை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், சண்டிகர் நகரில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், தொழுகைகள் பள்ளிவாசல்களில்தான் நடத்தப்பட வேண்டுமெனவும், பொது இடத்தில் நடத்தக் கூடாது என்று கூறினார்.

ஒருவேளை பள்ளிவாசல்களில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டால், பள்ளிவாசல்களுக்கு சொந்தமான இடங்களில்தான் தொழுகையை நடத்த வேண்டும் என்றும் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.