பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் ஆவேசம்..!

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், பாலியல் வன்கொடுமைகளுக்கு, பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென  ஆவேசத்துடன்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், பாலியல் வன்கொடுமைகளுக்கு, பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென  ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் வீதிகளில் மட்டும் நடப்பதில்லை என்றும், அவர்களது வீடுகளிலேயே நடப்பதாகவும் கூறினார்.

வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதால், இவற்றை தடுப்பதில் சில கடினங்கள் இருப்பதாகவும் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார். பாலியல் வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் என சிலர் கூறுவதை சுட்டிக் காட்டிய அவர், அப்படியென்றால் வயதானவர்களும், குழந்தைகளும் ஏன் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்