தூத்துக்குடி புறநகர் குழு பகுதியில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு DYFI_AIDWA சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நீட் தேர்விற்கு தடைக்கோரி வழக்கு தொடுத்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

unknown node

நீட் தேர்விற்கு தடைக்கோரி வழக்கு தொடுத்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

unknown node

அரியலூர் மாவட்டம் , செந்தூறை குழுமூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தார் . மாணவியின் தந்தை கூலித் தொழிலாளி . திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி வேலை பார்த்து வந்தார். அனிதாவுக்கு மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்தது . அனிதா 196. 5 கட்டாப் மதிப்பெண் பெற்றிருந்தார் . நீட் தேர்வில் 720 க்கு 86 மதிப்பெண் எடுத்ததால் மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை . நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும் ஒருவர் ஆவார் . மருத்துவபடிப்பில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் . மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதால் அனிதா மன உளைச்சலில் இருந்து உள்ளார் . அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் மாணவர்கள் , இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது .

unknown node

இதன் ஓர் எதிர்ப்பு குரல் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜனநாயக வாலிபர்கள் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் மாணவி அனிதாவின் உயிரை பறித்த நீட் தேர்வை எதிர்த்தும் , மத்திய , மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் . இதில் ஜனநாயக வாலிபர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பி.ராஜா மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் DYFI புறநகர் தலைவர் பெருமாள்,ஐயப்பன்,உதயா, மாரியப்பன் ,ஜோதி பாசு, ஸ்டாலின்,அரிய நாயகம் முகேஷ்,மகேஷ் சரஸ்வதி,உள்பட பலர் கலந்து கொண்டனர்