பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை அணி ! 232 ரன்னில் இங்கிலாந்திடம் சுருண்டது!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி டாஸ் வென்ற

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

unknown node

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே திமுத் கருணாரத்ன 1 ரன்னும் , குசல் பெரேரா 2 ரன்னில் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.13-வது ஓவரில் அவிஷ்கா 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அடுத்தாக களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.

unknown node

30-வது ஓவரில் குசல் மெண்டிஸ் மோர்கனிடம் தனது கேட்சை கொடுத்து 46 ரன்னில் வெளியேறினார்.மத்தியில் களமிறங்கிய ஜீவன் மெண்டிஸ் 0 , தனஞ்சய டி சில்வா 29 ,இசுரு உதனா 6 , திசாரா பெரேரா 2 , லசித் மலிங்கா 1 ரன்களுடன் வெளியேறினர்.இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 85 ரன்கள் குவித்தார்.

unknown node

இங்கிலாந்து அணி பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ,மார்க் வூட் இருவரும் தலா 3 விக்கெட்டையும் , ஆதில் ரஷீத் 2 விக்கெட்டையும் பறித்தார்.233 ரன்கள் இலக்குடன்  இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது