அட்டகாசமான ஐடியா ப்ரீபெயிட் திட்டம்..!

ஐடியா செல்லுலார் தற்போது அதன் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 3

ஐடியா செல்லுலார் தற்போது அதன் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த ஐடியா ரூ.349/- ஆனது நிறுவனத்தின் ரூ.357/- ப்ரீபெயிட் திட்டத்துடன் முற்றிலும் மாறுபடுகிறது.

இந்த இரண்டு திட்டங்களும் ஐடியாவின் பெரும்பாலான வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைத்தாலும் கூட, ரூ.357/- திட்டத்தை விட ரூ.349/- ஆனது சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

மொத்த காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டா நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா என செல்லுபடியாகும் உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த திட்டம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- என்கிற சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்துடன் போட்டி இடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியாவின் புதிய ரூ.349 திட்டமானது, இன்னும் சில வட்டாரங்களில் கிடைக்கப்பெறவில்லை என்பதும், மறுகையில் உள்ள ஐடியா ரூ.357 திட்டமானது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐடியா செல்லுலாரின் புதிய ரூ.349/- ஆனதும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக அறிமுகப்படுத்தியவுடன் ரூ.357 திட்டம் அகற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வினாடிக்கு ஒரு பைசா ரூ.349 திட்டமானது குரல் அழைப்பு வரம்புகளுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 250 க்கும் மேற்பட்ட வெளிச்செல்லும் நிமிடங்களை (உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகள்) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தொடர்ச்சியான முறையில் ஏழு நாட்களுக்கு ஏறக்குறைய 1000 நிமிடங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா இந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவெனில், தேசிய ரோமிங்கில் ஐடியா நெட்வொர்க்கில் மட்டுமே இலவச ரோமிங் நன்மை கிடைக்கும், மற்ற நெட்வொர்க்குகளுக்கு கிடைக்காது. டேட்டா வரம்பை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 3 ஜிபி தரவு முடிந்த பிறகு, 10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா என்கிற விகிதத்தில் கட்டபம் வசூலிக்கப்படும். எல்லாவற்றிக்கும் மேலாக ஐடியா வழங்கும் இந்த டேட்டா 4ஜி அல்ல, 3ஜி அல்லது 2ஜி என்பது குறிப்பிடத்தக்கது.