கடக்நாத் எனப்படும் கருங்கோழி இனத்தைக் காக்க வலியுறுத்தும் விழிப்புணர்வுக்காக, பெட்டைக்கும் சேவலுக்கும் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.
உடல் முழுவதும் கருப்பு வண்ணத்தில் அமைந்த இந்த கோழி இனம் கடக்நாத் என அழைக்கப்படுகிறது.
கருப்பு வண்ணத்தில் உள்ள இதன் இறைச்சி மருத்துவ குணம் கொண்டதென கருதப்படுகிறது. த
ற்போது அழிந்து வரும் கருங்கோழி இனத்தை காக்க வலியுறுத்தும் நோக்கில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே அந்த இனத்தின் பெட்டைக்கும், சேவலுக்கும் கிராம மக்கள் மணம் முடித்து வைத்தனர்.
பட்டுத்துணியும், மாலையும் அணிவிக்கப்பட்ட கருங்கோழிகளுக்கு, மேளதாளம் முழங்க அவர்கள் திருமணம் நடத்தினர். இந்த திருமணத்துக்காக கிராமத்தில் 250 அழைப்பிதழ்களும் அச்சடித்து வினியோகித்திருந்தனர்.