இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்ற கேள்விக்கு, கூகுள் தேடலில் நேருவின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeநேற்று ஒருவர், ‘’இந்தியாவின் முதல் பிரதமர் யார்?’’ ( India’s first PM) என்று கூகுளில் தேடியுள்ளார்.அப்போது,நேருவின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படம் விக்கிப்பீடியாவில் கிடைத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் முதல் பிரதமரான நேருவின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது.
இந்த தொழில்நுட்ப பிழை நடைபெற்ற சிறுது நேரத்தில், அதை பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் இது தொடர்பான விளக்கத்தை கூகுள் பக்கத்தில் கேள்விகளாக எழுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை கூகுள் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.