தற்போது ஜெர்மனியையும் ஆக்கிரமித்துள்ளன அமெரிக்க உணவில் புகழ்பெற்ற கிரே மீன்கள்.
ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் வேற்று கிரகவாசி போலவும், பெரிய அளவிலான வண்டு போல காட்சியளிக்கும் இந்தவகை மீன்கள் சுவையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
இதன் காரணமாகவே அமெரிக்க உணவில் மட்டுமல்லாது தற்போது ஐரோப்பாவின் பலநாடுகளிலும் கிரே மீன்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
இதையடுத்து நன்னீர் குட்டைகளில் மட்டுமே வளரும் இந்த வகை மீன்களை அதிகமாக ஏற்றுமதி செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மேலும் கிரே மீன்கள் அதிகம் விரும்பப்படுவதால் ஐரோப்பிய நாடுகளிலும் இதனை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.