கென்யாவில் கனமழை : 27 பேர் உயிரிழந்தனர்

கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.

கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.

நகுரு நகரத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மழை காரணமாக சுபுகியா (subukia) பகுதியில் இருந்த அணை பலவீனம் அடைந்து உடைந்தது. அணையில் இருந்து வெளியேறிய பல நூறு மில்லியன் கன அடி நீர் ஊருக்குள் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் தத்தளித்தனர்.

உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு தண்ணீர் தத்தளித்த பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் 27 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்

கென்யாவில் கனமழை : 27 பேர் உயிரிழந்தனர்