திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கணவன் மனைவி வெட்டிக்கொலை..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற நபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற நபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெள்ளைவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயராமன் – விஜயா தம்பதியிடம் வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் நகைகளைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நடந்த கைகலப்பில் தம்பதியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களைக் காப்பாற்றச் சென்ற ஆறுமுகம் என்பவரையும் அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள், 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த மூவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜெயராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்